பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

 4. அழைப்பு அனுப்பாததை எதிர்த்து ஒரு சட்ட மன்ற உறுப்பினர் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட உரிமை உண்டா?

     பஞ்சாப் மாநிலத்துச் சட்டப்பேரவை 1968-69 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை விவாதித்து அனுமதிப்பதற்கு முன்பாகவே சபாநாயகர், சட்டப் பேரவையை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்து விட்டார். சட்டமன்றம் செயலற்றதாகி விட்டது. வேறு வழியின்றி.சபாநாயகர் செயலை எதிர்த்து,அரசு மூலமாக சட்ட மன்றமே உச்ச நீதி மன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதி மன்றம்
      "பேரவையை மார்ச்சு 31க்குப்பிறகு ஒத்திவைத்ததன் மூலம் அரசின் நிதித் துறை செயலற்றதாகி விட்டது. மக்களாட்சி முறையும் சிதறுண்டு போய் விட்டது. ஆகவே சட்டப் பேரவை செயல் படா வகையில் பேரவை ஒத்தி வைக்கப்படல் கூடாது' என்ற தீர்ப்பை வழங்கி விட்டது.

In the Punjab legislative Assembly, the speaker’s ... decision to adjourn the House for two months, created a serious crisis in the Punjab Assembly as the Assembly 3 had yet to pass the budget for the year 1968–69. In