பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

this context, the supreme court observed "The legislature - cannot be allowed to hibernate, due to adjournnent by the speaker for a period beyond 31st March, while the financial business languished and the constitutional machinery and democracy itself are wrecked."

-A. I. R. 1969 S. C. 903 Kaul and Shakdhar: Practice and procedure of parliament Page : 104

சட்டமன்ற நிகழ்ச்சிகளில், நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் சட்டமன்றமே தன் குறை தீர, அரசு மூலம் உச்சநீதி மன்றத்திற்குச் செல்ல நேர்ந்தது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற, சட்டமன்ற நிகழ்ச்சிகளில், உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கியதற்கான சான்றுகள் மேலும் உள்ளன.

1969-இல் பூரி கோவர்த்தன பீடம் சங்கராச்சாரியாரின் ஒரு கருத்து, செயல் குறித்து நாடாளுமன்றத்தில் , கொண்டு வரப்பட்ட ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அவையில் கூறப்பட்ட சொற்களால் புண்பட்ட, மடத்தைச் சேர்ந்த தேஜ்கிரான் ஜெயின் என்பவர் மக்களவை சபாநாயகர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதி மன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு, சபாநாயகர், உள்துறை அமைச்சர், அவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் மறுக்கப்பட்டாலும், வழக்கின் முடிவை எதிர்நோக்கி

நாடாளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றம்