பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

in Parliament) என்ற தொடருக்கோ சட்டங்களை ஆராய்ந்து முடிவு கூறும் நீதி மன்றங்களால் தெளிவான பொருள் உணர்த்தப்படவில்லை” என்று முதல் வாக்கியத்தை முடித்துவிட்டு, அடுத்து " . எர்ஸ் கின்மே." அவர்கள் கூறியதாக மேலே எடுத்துக்காட்டிய பகுதியை, எழுத்துப் பிசகாமல் அப்படியே எடுத்துக் கூறி முடித்து விட்டு, அடுத்த பத்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

- “பாராளு மன்றத்தின் நடைமுறைகள்” என்ற தொடர், கேள்வி கேட்பது, அக்கேள்வியை எழுத்து மூலம் அறிக்கையாகக் கொடுப்பது ஆகிய இரண்டை யும் உள்ளடக்கியதாம். அவையின் உறுப்பினர் என்ற முறையில், தன்னுடைய பாராளுமன்ற அலுவல்களை, இரு அவைகளிலும் ஆற்றும் வகையில் சொல்லிய அனைத்துச் சொல்லையும் ஆற்றிய செயல்களையும் போலவே, இரு அவைகளின் குழுக்களிலும்,ஒர் உறுப்பினர் என்ற உரிமையில் தன் கடமையை நிறைவேற்றும் வகையில், கூறிய ஒவ்வொரு சொல்லையும், ஆற்றிய ஒவ்வொரு செயலையும் உள்ளடக்கியதாம்' என்று முடித்துள்ளார்.

அதோடு நில்லாமல், அடுத்து ஒரிஸா உயர்நீதி மன்றம் 'பாராளுமன்றத்தில் நடைமுறைகள்' என்ற தொடர், பாராளுமன்றம் உண்மையில் கூடி இருக்கும் காலத்து அவை நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடும்

நிலையில் வரையறுத்து வைக்கப்பட்டுவிடவில்லை. கேள்விகளுக்கான அறிக்கைகளைக் கொடுப்பது, தீர்மானங்களுக்கான அறிக்கைகளைக் கொடுப்பது

போலும், சில பூர்வாங்க நடவடிக்கைகளையும் உள்ளடக் கியதாம் வகையில் முடிந்த முடிவாக ஆளவல்ல பாராளுமன்றச் சொல்லாட்சியாகி விட்டது எனத்.