பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

வேண்டும் எனக் கேட்பது, உறுப்பினரின் பாராளுமன்ற உரிமை?

அரசியல் சட்டம் மூன்றாம் பகுதியில் வழங்கப் பட்டிருக்கும் அடிப்படை உரிமை என்பதன் கீழ், இது அடங்காது. இந்தியக்குடிமகன் என்ற உரிமை பெற்ற அனைவர்க்கும் வழங்கப்பட்ட உரிமை, அடிப்படை உரிமை. ஆனால், தமிழ் நாடு சட்டமன்ற விதிகளில் 3-வது விதியின்படி, சட்டசபைக் கூட்டத்திற்கான அழைப்பாணை உறுப்பினர்க்கு அனுப்பப் பெறவேண்டும் என்பது, அரசியல் சட்டம் 105 மற்றும் 194 பிரிவுகளின்கீழ், உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் ustairéjudgår/p a-fishu (Parliamentary Privilege) sooth.

அடிப்படை உரிமை வழங்கும் பிரிவுகள் உட்பட உள்ள அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுகளையும் திருத்தலாம் என்ற அரசியல் சட்டத்து 24-வது திருத்தம் அரசியல் கட்டம் 32வது பிரிவின் கீழ், தன் அடிப்படை உரிமையை நிலைநாட்டிக் கொள்ள, உச்ச நீதிமன்றம் செல்லலாம் என ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் உரிமையை வேண்டுமானால் செல்லத் தக்கதல்லதாக ஆக்கியிருக்கலாம். ஆனால், அரசியல் சட்டம் 105 மற்றும் 194 பிரிவுகள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர் களுக்கு மட்டுமே வழங்கியிருக்கும் பாராளுமன்ற அதிகாரம், உரிமை, சட்டப்பாதுகாப்பு(Powers, Privilege, ! and immunities of Parliament and its members) -ogo, வற்றைச் செயலற்றதாக்கும் உரிமை, அந்த 24-வது திருத்தத்திற்கு வழங்கப்படவில்லை. - - - -

அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பாராளுமன்ற

உரிமைகளைப் பறிக்கும் எந்தத்திருத்தத்தையும் அரசியல் சட்டம் அனுமதிக்காது. ஆகவே, தன்னுடைய பாராளு