பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

மன்ற உரிமைக்கு ஊறு நேர்ந்த போது, அதைப் போக்கிக் கொள்ள, தன் பாராளுமன்ற உரிமையை நிலை பெறச் செய்துகொள்ள, ஒரு சட்டமன்ற உறுப்பினர், நீதிமன்றம் செல்வதற்கு எந்தச் சட்டமும் குறுக்கே நிற்க இயலாது.

அரசியல் சட்டத்து 105 மற்றும் 194ஆம் பிரிவுகள் அவை P5Lauuq-#65) 5&#6ir (proceedings of the House) @5 m3) 5 g5ı 5; தான்் எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்கக் கூடாது என நீதிமன்றங்களுக்குத் தடை விதித்துள்ளனவே அல்லாது, ஓர் உறுப்பினரின் பாராளுமன்ற உரிமை பறிபோனது பற்றி விசாரிக்கக் கூடாது எனத் தடை விதிக்கவில்லை.

திரு. வி. கே ராசு, திரு. மதுராந்தகம் ஆறுமுகம், திரு. ஆபிரகாம் ஆகியோர்க்கு நேர்ந்திருப்பது பாராளு மன்ற உரிமை இழப்பு. அதற்குப் பரிகாரம் காண நீதி மன்றம் செல்ல அம்மூவருக்கும் உரிமை உண்டு; அவர் கள் முறையீட்டை ஏற்று தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களுக் கும் உரிமை உண்டு.

இந்த இரு உரிமைகளை, அரசியல் சட்டத்து 105 மற்றும் 194 பிரிவுகளோ அரசியல் சட்டத்து எந்தத் திருத்தமோ பறிக்கும் உரிமை பெற்றவை அல்ல.

సేవ