பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



உறுப்பினர்கள் பதின்மரில் என்னோடு சிறையில் இருந்த திரு. V. K. இராஜூவும் ஒருவர்.

இந்நிலையில், விசாரணைக்காகச் செய்யாறு தோழர்கள் வேலூர் மத்திய சிறையிலிருந்து செய்யாறு. நடுவர் மன்றத்திற்குக் கொண்டுவரப்பெற்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 8-1-87அன்று. மயக்கம் போட்டு விழுந்து விட்டேன் என்ற காரணம் காட்டி என்னை மட்டும் காவல்துறைக் காவலரோடு வேலூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

அவ்வாறு, வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது சட்டமன்றத் தீர்மானம் அரசியல் சட்டத்திற்கும், தமிழ்நாடு சட்டமன்ற விதிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதை விளக்கி வேலூர் தினகரனிலும், அதைத் தொடர்ந்து சென்னை முரசொலி 22-1-87, 6-2.87,7-2-87,8-2-87 மற்றும் 9.2.87 நாளிட்ட இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்தேன் அக்கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறு நூல். இதுகாணும் அரசியல் நிர்ணயச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் ஆகியவற்றில் வல்லுநர்கள் தங்கள் கருத்தினைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

அன்புள்ள
கா. கோவிந்தன்