பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

புதர்களெல்லாம் பெண் இனம். - எஸ்டோனியா [பெருகக் கூடியவை.]

ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள். -( ,, )

ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு. -( ,, )

மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள்.

-ஃபின்லந்து

பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம். - கிரீஸ்

கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள். -( ,, )

பெண்ணின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள்.

-ஜியார்ஜியா

அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள். -ஹங்கேரி

கோபம் வந்த பெண் கரையில்லாத கடல்.

-லத்தீன்

கன்னியின் இதயம் இருண்ட கானகம். -ரஷ்யா

இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை. -( ,, )

சிரிக்கிற பெண்ணையும் அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம். -( ,, )

எந்தப் பெண்களைப் பற்றி அதிகமாய்ப் பேச்சில்லையோ அவர்கள் மிகவும் நல்லவர்கள். -சைலீஷியா

அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.

-ஸ்பெயின்

மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள். -( ,, )

கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல். -( ,, )

கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை. -( ,, )

தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள். -( ,, )