பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.

- இங்கிலாந்து

காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும். -( ,, )

காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -( ,, )

காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தீன்

காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை. -ஸ்பெயின்

காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன்

காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும். -( ,, )

காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம். -( ,, )

நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும்.

-சுவிட்சர்லந்து

காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு. - எகிப்து

காதல் கட்டுப்பாடற்ற கழுதை. -ஆப்பிரிகா

ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடியாது. -போலந்து

காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது. -( ,, )

முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு, அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு. -( ,, )


பெண் பார்த்தல்

தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு. - தமிழ்நாடு

வலுவில் வந்தவள் கிழவி. -( ,, )

கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு. - துருக்கி