பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழக வேண்டும். -ரஷ்யா

உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே. -( ,, )

உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே. - ஸ்பெயின்

பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு. -ஆப்பிரிகா

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது. -( ,, )

அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன். -( ,, )

திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள். -( ,, )

பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள். - எஸ்டோனியா

திருமணம்

ஒன்று இளமையிலேயே திருமணம் செய்து கொள் , அல்லது துறவியாகி விடு. -பல்கேரியா

குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பன்.

- இந்தியா

வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார்.

- தமிழ்நாடு

பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மணம் செய்கிறார்கள்; மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். -சீனா