பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு; மும்முறை பைத்தியம். -ஹாலந்து

நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு நாயகன் கிடைப்பான்; ஆனால் ஒரு 'டன்' கோதுமை கொடுத்தால் தான் ஒரு பெண் கிடைப்பாள்.

-எஸ்டோனியா

சமையல் மோசமானால், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை. மோசமானால், ஒரு வருட நஷ்டம்; விவாகம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஷ்டம். -எஸ்டோனியா

அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை. -( ,,)

கணவன் தலை, மனைவி இதயம்- இப்படியுள்ள திருமணம். இன்பமானது. -எஸ்டோனியா

மனிதர் தானாக வரவேற்றுக் கொள்ளும் தீமை திருமணம்.

- கிரீஸ்

ஒவ்வொரு ஜாடிக்கும் ஒரு மூடி கிடைக்கும். - இதாலி [திருமணம்].
'அம்மா! விவாகம் என்பது என்ன?'
‘மாவரைத்தல், நூல் நூற்றல், குழந்தைகள் பெறுதல், அழுதல்.' -மான்டினீக்ரோ

காதல் சிறகுகளைக் கொண்டு பறக்கும், திருமணம் இரண்டு கழிகளின் உதவியால் நடந்து வரும். -ரஷ்யா

கலியாணத்தால் குளிர்ந்து போகாத காதல் நெருப்பு இல்லை.

-( ,,)

திருமணம் என்றுதான் உண்டு, ஆனால் ‘பிரிமணம்' என்று கிடையாது. -( ,,)

ஆண்டவனே, என்னை இரண்டாவது கலியாணத்திலிருந்தும், மூன்றுவிட்ட தாயாதிகளிடமிருந்தும் காப்பாயாக. -( ,,)

ஒரு சகோதரிக்குக் கலியாணமானால், அடுத்தவளுக்கும் ஆகும். ஒரு தொட்டி விற்றால், அடுத்ததும் விலை பாகும். - செர்பியா