பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம். - ஸ்பெயின்

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும். -( ,,)

காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும். -( ,,)

திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட. -( ,,)

திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. -( ,,)

வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும். - சுவீடன்

கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள். -யூதர்

உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள். -எகிப்து

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார்.

- ஜெர்மனி

முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்; இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள்,

-ஹங்கேரி

ஓர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் -யஜமானி. - கிரீஸ்

நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். -( ,,) சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம். -லத்தீன் திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான்,

-டால்ஸ்டாய்