பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான். -ஸ்பெயின்

ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள். -யூதர்

மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிறான். -ஸ்காட்லந்து

மனைவி விட்டுப் பிடித்தால்தான், ஒருவன் முன்னிலைக்கு வரமுடியும். -( ,, )

வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம். -ஃபின்லந்து

கற்பு

சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது. -மான்டெயின்

கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள். -டாஸிடஸ்

ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.

- இங்கிலாந்து

மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். - ஸ்பெயின்

வீடு

ஒவ்வொரு வீடும் ஓர் உலகம். -ஸ்பெயின்

சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.

- லிதுவேனியா

நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை. -( ,, )

உயரே ஏறிப் பார் : எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன. - இந்தியா