பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும். - தமிழ்நாடு

தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது. -மலாய்

ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான்.

-( ,, )

கட்டடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி.

- இங்கிலாந்து

வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான். -எஸ்டோனியா

வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு. -( ,, )

நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான். - நார்வே

வீட்டுக்குக் கேடு வருவது பின்கதவினால்தான். -ரஷ்யா

நம் வீடு இறைவனுடையது. -செர்பியா

வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான்.

-ஸ்பெயின்

ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். -யூதர்

ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும். - ஆப்பிரிகா

வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின் மீது அமரக் கூடாது. -( ,, )

தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களைப் பொருட்படுத்த மாட்டான். -( ,, )

பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும். - எகிப்து

வீடு அன்பு நிறைந்த இடம். -ஆப்பிரிகா

பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம். -ஜெர்மனி

பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம். -( ,, )