பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள். -பல்கேரியா

பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு. -( ,, )

திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும். - எஸ்டோனியா

தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை. -( ,, )

வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி. - இதாலி

கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும். -ரஷ்யா

தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன் தனது நிழலையே துரத்திக் கொண்டு திரிகிறான். -( ,, )

உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும். -( ,, )

என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன். - செர்பியா

தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது. -( ,, )

வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்கவேண்டும்.

-சுவீடன்

வீட்டுத் தலைவன்மீது தான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும். - ஆப்பிரிகா

பெண்தான் இல்லம். -( ,, )

பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு. -( ,, )