பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது. -டால்ஸ்டாய்

கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிறார்; ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து

அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள சிறு - மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும். -( ,, )

வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும், வீட்டிலே யிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல். -( ,, )

வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம். -( ,, )

நான் என் தொப்பியை மாட்டும் இடமே என் வீடு. -( ,, )

இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு. -( ,, )

தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை -லத்தீன்

நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது. -( ,, )

என் வீட்டுக்கு நானே ராஜா. -ஸ்பெயின்

தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக்கிறான். - துருக்கி

வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ்

சேவல் தன் குப்பை மேட்டிலிருந்தே கூவும். -( ,, )

வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான். -ஹாலந்து