பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும், முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும்.

-ஐரோப்பிய நாடோடிகள்

வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.

- ஆப்கானிஸ்தானம்

நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி. -( , , )

தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும். -ஜெர்மனி

குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான். -( , , )

தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.

- போலந்து

குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ; கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள். -( , , )

[முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.]

அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய்விடாது. -பெல்ஜியம்

ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான். - இங்கிலாந்து

வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன். -அயர்லந்து