பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.

-அயர்லந்து

சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர்.

-ஸ்காட்லந்து

[குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.]

கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா. -( , , )

குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது. - வேல்ஸ்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

- தமிழ் நாடு

உன் குழந்தைகள் தீயோரா யிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. -பல்கேரியா

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. -டென்மார்க்

அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.

- எஸ்டோனியா

பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும். -( , , )

வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது. -( , , )

குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.

-( , , )

குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும். -( , , )

பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.

-( , , )

மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும். - எஸ்டோனியா