54
தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்? - இந்தியா
புத்திசாலியான மகன் தந்தைக்கு மகிழ்ச்சி யளிப்பான்.
-ப. ஏற்பாடு
தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான். -சீனா
மகனைப் புகழும் தந்தை தன்னையே புகழ்ந்து கொள்கிறான்
-( , , )
ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம், பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது. -( , , )
ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.
- இங்கிலாந்து
தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப் போவான். -( , , )
குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்களை நேசிப்பவன். -ஃபிரான்ஸ்
தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது. -ரஷ்யா
குதிரைகளும் மனிதர்களும் தாய்வழியைக் கொள்வார்கள்
- இந்தியா
அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள். -( , , )
பசுவின் பின்னால் எப்பொழுதும் ஒரு கன்று இருந்து வரும் சில சமயங்களில் அது சொந்தக் கன்றா யிருக்கும் சில சமயங்களில் வேறு பசுவின் கன்றா யிருக்கும்.
-கீழை நாடுகள்
தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம். -ஆப்பிரிகா
குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய். - தாக்கரே