பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள். - இங்கிலாந்து

தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள். - ( , , )

தழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள். - ( , , )

தாயில்லாத வீடு வீடாகுமா? - ( , , )

நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும். - ஜெர்மனி

தாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.

-ஸ்பெயின்

தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.

- யூதர்

உங்களுடைய தந்தையையும் தாயையும் கௌரவியுங்கள்.

-ப. ஏற்பாடு

என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக் கொள், உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம். - ( , , )

எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை. -ஸ்பெயின்

புத்திசாலியான மகனால் தந்தை மகிழ்ச்சியடைகிறான். ஆனால் மூட மகனால் தாயின் உள்ளம் வருந்துகின்றது.

ப. ஏற்பாடு

தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான். -சீனா

தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான். - ( , , )

நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிறார்கள்.

-ஷேக்ஸ்பியர்

ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான். -ஸ்பெயின்