பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான். -யூதர்

தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே. -எகிப்து

தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்; தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும். -ஸ்காட்லந்து

தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி. -பல்கேரியா

தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை. -எஸ்டோனியா

தாய்ப்பாலோடு பருகியதெல்லாம் ஆன்மா பிரிந்து செல்லும் போதுதான் அதனுடன் வெளியே செல்லும்.

-ரஷ்யா

குழந்தையின் விரலில் வலியிருந்தால், தாயின் இதயத்தில் வலியுண்டாகும். -( , , )

கடவுள் உயரே யிருக்கிறார், பூமியில் தந்தை யிருக்கிறார்.

-( , , )

(ஒரு தந்தை ) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல்.

-( , , )

நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது. -யூதர்

[அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.]

மூட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக் கிறது! -ஆப்பிரிகா

அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை. -( , , )

அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.--அவள் ஈடற்றவள். -( , , )

குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தை விட்டு அசைய முடியாது. -அமெரிக்கா