பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


குலம்

ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன். - இங்கிலாந்து

குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும். -( , , )

தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்! - துருக்கி

ஆயன் மகன் ஆயன். - ரஷ்யா

இனம்

வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும். - இந்தியா

பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு. -( , , )

[பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.]

ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை. -( , , )

ஊசி வாளைப் பார்த்தால், 'அண்ணா' என்று அழைக்கும்.

- ரஷ்யா

குடும்பம்

சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும். - இங்கிலாந்து

உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா. -( , , )