பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.

-ஜெர்மனி

ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர். -யூதர்

மருமகன்

நல்ல மாப்பிள்ளை கிடைத்தவன் ஒரு மகனை அடைந்தவன்; தீய மாப்பிள்ளை கிடைத்தவன் தன் மகளை இழந்தவன்.

-ஃபிரான்ஸ்

சுற்றம்

அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவு தான். - இந்தியா

உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும். -( , , )

உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்!

-ஆப்பிரிகா

நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக, நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக! -போலந்து

அத்தையோடு நீ உண்ணலாம், ஆனால் தினமும் போய் உட்காரக் கூடாது. - இங்கிலாந்து

அதிக உறவினர், அதிகத் துன்பம். - பிரான்ஸ்

நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள். - இதாலி

நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் நேசிக்க வேண்டும். -யூதர்

உறவினர் செல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களை மதிக்கிறோம். -( , , )

உதிரம் நீரைவிடச் சூடுள்ளது. -எஸ்டோனியா

மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமா யிருக்கும். - லத்தீன்