பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

வயதான கன்னியைவிட இளமையான விதவை மேல்.

-யூதர்

கைம்பெண் கூரையில்லாத கட்டடம். -எஸ்டோனியா [மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.)

அநாதைகள்

அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே. -அரேபியா

தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை. -யூதர்

பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல். - இங்கிலாந்து

தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.

-எஸ்டோனியா

அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையரா யிருங்கள்.

-ரஷ்யா

பழமை

பழைய இஞ்சியில் காரம் அதிகம். -சீனா

நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம். -யூதர்

உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும். - இங்கிலாந்து

ஒருவன் தன் தாய்நாட்டிற்கு நல்லமுறையில் தொண்டாற்றினால், அவனுடைய முன்னோர்களைப் பற்றிக் கவலையில்லை. -வால்டேர்

பழைய துணி-புதிய கிழிசல். -எஸ்டோனியா