பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


ஒற்றுமை

ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம். - இந்தியா

நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையா யிருப்போம். - அரேபியா

வாதியும் எதிரியும் ஒரு படகிலே சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் செல்ல வேண்டும். -கீ. நா.

அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும்.

-பாரசீகம்

ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள். -அரேபியா

மூன்று பிரிகளைக் கொண்ட சரட்டை விரைவில் அறுக்க முடியாது. -ப. ஏற்பாடு

தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.

- இங்கிலாந்து

ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம். -( , , )

பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும்.

-( , , )

ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒவ்வொருவரும். -டூமாஸ்

ஒற்றுமைப்பட்டால் வலிமை அதிகம். - லத்தீன்

அடக்கமாக அடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒற்றுமையே சிறந்த வலிமை. -( , , )

கயிறு கட்டாத கதிர்க்கட்டு வெறும் வைக்கோல்தான்.

-ரஷ்யா

எவன் என்னோடு இருக்கவில்லையோ அவன் எனக்கு எதிரானவன். -பு. ஏற்பாடு

கட்டாகவுள்ள கழிகளை ஒடிக்க முடியாது. -ஆப்பிரிகா