பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.

- ஸ்பெயின்

விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது.

-சுவீடன்

புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம்.

-லத்தீன்

அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி.

-சீனா

கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம்.

-அபாகிரைஃபா

மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும்.

-ஹாலந்து

விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான்.

-ஃபிரான்ஸ்

விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது.

-( , , )

மூடர்கள் விருந்து நடத்துகிறார்கள், அறிவாளிகள் அதை அநுபவிக்கிறார்கள்.

-இதாலி

இன்று விருந்து, நாளை உபவாசம்.

- லத்தீன்

பெரிய விருந்தும் சிறிது நேரம்தான்.

-யூதர்

விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை.

- இங்கிலாந்து

விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள்.

-( , , )

இளமை

உலகம் இளையோருக்காக உள்ளது.

-ஸ்லாவேகியா

அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.

- இங்கிலாந்து

கழுதையும் இளமையிலே அழகுதான்.

- இந்தியா

பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன்.

-ஜப்பான்