பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான். - துருக்கிஸ்தானம்

புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. -

சீனா

இளங் கன்று பயமறியாது. - தமிழ் நாடு

வாலிபம் என்பது பைத்தியம். -கீழ் நாடுகள்

கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.

-ஆப்கானிஸ்தானம்

இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்! -ஃபிரான்ஸ்

இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள். -ஜெர்மனி

இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய்.

- இங்கிலாந்து

வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும். -அயர்லந்து

வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும். -( , , )

மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம்.

-லத்தீன்

இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு.

-சுவீடன்

இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர் ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர். -( , , )

ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். - -ஃபிரான்ஸ்

வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல்.

-( , , )

மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம். -கதே