பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


முதுமை

வீடு 'போ, போ' என்கிறது. 'காடு வா, வா' என்கிறது.

- தமிழ்நாடு

வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன். - இங்கிலாந்து

வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.

-( , , )

ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர். -( , , )

முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும். -( , , )

காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது. -( , , )

மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும். -( , , )

வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது. -( , , )

முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவராயிருக்க வேண்டும். -( , , )

முதுமையே ஒரு நோய். -( , , )

வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம். -( , , )

மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை. -( , , )

முதுமை உள்ளே வந்தால், புத்தி வெளியே போய்விடும்.

-ஷேக்ஸ்பியர்

ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான்.

-அயர்லந்து

வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று. - டென்மார்க்

இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை. -ஃபிரான்ஸ்

பெண்டிர்க்கு நரகம் முதுமை. -( , , )

முதுமையால், முகத்தைக் காட்டிலும், மனத்திலே அதிகச் சுருக்கங்கள் விழும். -மான்டெயின்