பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான். -போலந்து

வயது முதிர்ந்தவரைப் பார்த்து, உடம்பு எப்படி?' என்று கேட்க வேண்டாம், 'இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும். -( , , )

முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும்.

-பல்கேரியா

மனிதன் இருமுறை குழந்தை. -எஸ்டோனியா

கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும். -( , , )

மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது. -( , , )

தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி. -எஸ்டோனியா

கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது. -( , , )

கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான். -( , , )

வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான். - ஐஸ்லந்து

தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.

-ரஷ்யா

கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள். -செர்பியா

வயதானவருக்கு அவர் கேட்கு முன்னால் கொடு.

-ஆப்பிரிகா

தாடியுள்ள வாய் பொய் சொல்லாது. -( , , ) முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை.

- கிரீஸ்

ம-5