பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல்கிறான். -லத்தீன்

தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை. -யூதர்

இளைஞர் இறக்கக்கூடும், முதியோர் இறந்தே ஆகவேண்டும். -( , , )

வீட்டிலே மருந்து இருக்கிறது, ஆனாலும் நாம் மரிக்க வேண்டியவர்களே. - இந்தியா

பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு. -சீனா

பிறத்தல் என்பது வெளியே வருதல், இறத்தல் என்பது திரும்பிச் செல்லல். -( , , )

மரணம் நமது விருந்தாளி. - குர்திஸ்தானம்

மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள். -ஜெர்மனி

சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன். -( , , )

(நாள் பார்த்துவர) மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது.

- இங்கிலாந்து

செத்த மீன்கள் வெள்ளத்தோடு பேயாவிடும். -( , , )

மரணமே உலகின் யசமானன். - அயர்லந்து

மரணம் உண்மையே பேசும். -பல்கேரியா

மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான்.

-( , , )

அவன் பாயைச் சுருட்டும் நேரம் வந்து விட்டது. -ஜெர்ஸீ

[மரணத் தருவாய்]

மனிதன் மரணத்தின் குழந்தை. - எஸ்டோனியா

சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம். -எஸ்டோனியா

பிறப்பைத் தப்ப முடியாதவன் இறப்பையும் தப்பமுடியாது.

- பின்லந்து