பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

நன்மைகள் ஜோடி ஜோடியாக வருவதில்லை, சோகங்கள் தனித்தும் வருவதில்லை. -சீனா

விளக்கை ஏற்றுவதைவிட அணைப்பது எளிது. - ஜெர்மனி

வாரந்தோறும் ஞாயிறு உண்டு, அத்துடன் வெள்ளியும் உண்டு. -போலந்து

[ஞாயிறு ஓய்வு நாள், வெள்ளி உபவாச நாள்.]

நன்மை செய்வதில் நோக்கத்தைவிடச் செயல்தான் முக்கியம்; தீமையில் செயலைவிட நோக்கமே முக்கியம்.

-ஸ்பெயின்

நல்லது செழிப்பா யிராது. -( , , )

நல்லதை உள்ளே வைத்தால், நல்லதை வெளியே எடுக்கலாம். -யூதர்

உலகத்திலுள்ள எல்லாத் தலைகளையும்விட, ஒரு நல்ல இதயம் மேலானது. - இங்கிலாந்து

உறுதியா யில்லாவிட்டால், நீ நல்லவனா யிருக்க முடியாது.

-( , , )

தீமைக்கு உதவி செய்பவன் நன்மைக்குக் கேடு செய்கிறான்.

- கிரீஸ்

நல்லவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தெய்வம் தங்கியிருக்கின்றது. -லத்தீன்

அதிருஷ்டமுள்ளவன் என்பதைக் காட்டிலும், நல்லவன் என்று பெயரெடு. -லத்தீன்

நன்மை செய்வதில் நாம் சலிப்படையாமல் இருப்போமாக.

-பு.ஏற்பாடு

நீ நல்லவனாயிருந்தால், தனிமையாயிருப்பாய்.

- மார்க் ட்வெயின்

தீமை வெளியே போயிருந்தால்தான், நன்மை வீட்டுக்குள் வர முடியும். - ஸெக்