பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

11


சதை என்றால் தண்ணீர் நிறைந்த, தொள தொளத் தன்மையுள்ள, தொங்கி விழுகின்ற அமைப்புடையது என்று அர்த்தம்.

இப்போது புரிந்திருக்குமே!

ஊளைச் சதை என்பது உடலுக்குத் தேவை இல்லாதது. உடல் தோற்றப் பொலிவுக்கு ஆகாதது. உடல் வலிவுக்கு ஊத்தையானது, சத்தில்லாமல் சுரம் குறைந்த பழுதானது என்பது தானே மற்றவர்கள் பேசுகிற பேச்சு!

இந்தக் குண்டு என்பதை உண்டு இல்லை என்று ஆக்கி விட வேண்டும் என்ற ஆவேசம். உங்களுக்கு வர வேண்டும். உணர்வுக்குள் எழ வேண்டும். செயலுக்குள் சேர வேண்டும். ஊளைச் சதையை சிதைத்தே தீர வேண்டும் என்று நீங்கள் இப்பொழுதே, இந்த நொடியில் இருந்தே உறுதி பூண வேண்டும். உரிய வழிகளைக் காண வேண்டும்.

ஆகவே, என்மேல் அன்பு கொண்டு, என்னுடன் வாருங்கள். எழிலான உடல் பெறுவோம் என்று என் வழியில் சேருங்கள். நான் கூற விருக்கிற உபாயங்களைச் செய்து பாருங்கள். பிறகு கூறுங்கள் உங்கள் கருத்துக்களை, பேசுங்கள் உங்கள் பெருமைகளை.

உணர்ச்சி பூர்வமாக அமர்ந்திருக்கும் இந்த நாள், உங்கள் அழகான உடலுக்கு ஆரத்தி எடுக்கின்ற நாளாக அமையட்டும்.

வீரநடை தொடரட்டும். கைவீசி நடந்து கவர்ச்சியாக உடையணிந்து, காண்பவர்கள் மத்தியில் கெளரவமான ‘உயர்ந்த’ நிலையை அளிக்கட்டும்!

இந்த ஆறுதலான தேறுதலுடன், நமது பயணம் தொடர்கிறது. கவனமாகக் கருத்துகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்! காரியத்தில் இறங்குங்கள்!