பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

13


நாம் தினமும் உண்ணுகிற உணவில், சக்தியை அளிக்கின்ற மூன்று முக்கிய உணவுப் பொருட்களில், கொழுப்பும் ஒன்று. கொழுப்பு என்பது அதிக சக்தியை அளிக்கும் வல்லமை உடையது. ஒரு கிராமுக்கு 9 கலோரிகள். ஒவ்வொரு அவுன்சு கொழுப்புக்கும் 255 கலோரிகள் உள்ளது என்பார்கள்.

புரோட்டின், மாவுச் சத்தைவிட இரண்டு மடங்கு சக்தி படைத்தது கொழுப்பு என்பர். இப்படிப்பட்ட அதிக சத்தினை அளிக்கின்ற உணவுப் பொருட்களில் மிக முக்கியமானவை வெண்ணெய், முட்டைகள், மாமிசம், தாவர எண்ணெய் வகைகள். எண்ணெய் சத்துள்ள மீன்கள். பாலேடு கலந்த பாலான வகைகள் ஆகும்.

நாம் உண்ணுகிற உணவில் உள்ள கொழுப்புச் சத்துகள் எல்லாம், உயிர்க்காற்றோடு எரிந்து. சீரணமாகி, உடல் உறுப்புகளுக்குச்சக்தியைக் கொடுக்கின்றன. அந்தச் சத்துக்கள் யாவும். உடலின் அடிப்படை ஆதாரமாய் விளங்கும் செல்களுக்கு முக்கியமான, அவசியமானதாக ஆகி விடுகிறது.

உறுப்புகளுக்கு உடனடியாக உதவும் பொழுது, கொழுப்புகள் எரிந்து கரைந்து போகின்றன. அப்படி உதவாத பொழுது, கொழுப்பும் கரையாத பொழுது, தோல் பகுதிக்குக் கீழாக அடுக்கடுக்காக அவை சேமித்து வைக்கப்படுகின்றன.

எதற்கு இந்தச் சேமிப்பு? எந்த நேரத்திலும் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படலாம் அல்லவா? அந்த அவசர