பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா?


நேரத்திற்கு உதவுகிற வகையில்தான், கொழுப்புச் சத்தானது, உடலில் அடுக்கடுக்காக (Layers) சேமித்து வைக்கப்படுகிறது.

இப்படிச் சேமிக்கப்படுகிற கொழுப்புகள் முக்கியமான உள் உறுப்புகளுக்குப் பாதுகாப்புக் கவசங்களாகவே பணிபுரிகின்றன.

உதாரணத்திற்கு, குண்டிக்காய் (Kidneys) உறுப்புக்குப் பாதுகாப்புத் தருவதுடன், உடலுக்கு ஏற்படுகிற வெப்ப இழப்பைச் சீராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. உடலில் ஏற்படுகிற செல் பிரிவுகளின் வளர்சிதை மாற்றத்திற்கும் (Metabolism) உடல் நலத்திற்கும் உற்றுழி உதவுகிறது.

சில வகையான கொழுப்புகள், ஈரல் பகுதியிலும் சேமித்து வைக்கப்படுகிறது. கொழுப்பானது சில சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, விட்டமின் ஏ, பி, டி, ஈ, கே போன்றவைகள் கலந்திடும் வண்ணம் கரைந்து உதவுகிறது.

இத்தகைய ஈடற்ற சக்தி வாய்ந்த கொழுப்பானது இரண்டு வகைப்படும்.

கார்பன், நைட்ரஜன் ஆகிய அணுப் பொருட்களை உண்டு பண்ணுகிற வேதியல் மாற்ற நிலை காரணமாக, கொழுப்பு இரண்டாக வேறுபடுகிறது. கரையும் தன்மை கொண்டது. கரையாத தன்மை கொண்டது. சில மிருகங்களின் இறைச்சிகள் கரையும் தன்மை கொண்டவை. சில தாவர எண்ணெய்களும் இவ்வகையானதுதான்.