பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

15


உணவுகளில் உள்ள கரையும் தன்மை கொண்ட கொழுப்புச் சக்தியானது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் அளவை அதிகப்படுத்துவதுடன், பல சிக்கலான நோய்களையும் உண்டு பண்ணுகின்றன என்று வல்லுநர்கள் ஆய்வு வழி விளக்கியிருக்கின்றார்கள்.

கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்ளவது இப்பொழுதெல்லாம் ஒரு நாகரீகமாகவே ஆகிவிட்டது. அதனால்தான், மனித குலம், புதுப்புது நோய்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி, தவிடுபொடடியாகிக் கொண்டு வருகிறது. உடலுக்குக் கொழுப்பு இன்றியமையாதது தான். அதற்காக உடல் பூராவுமே கொழுப்பானால், என்ன ஆவது உடல் ? எப்படித் தாங்கும் இந்த மனித வாழ்க்கை?

பயணம் செய்கிறவர்களே! அதிக சுமையைக் கொண்டு வராதீர்கள்! தூக்கிச் சுமந்து தொல்லைப் படாதீர்கள்!

சுமை குறைந்த பயணம் சுகமாக இருக்கும். சந்தோஷத்தை அளிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

நமது வாழ்க்கைப் பயணத்திற்கும் இது பொருந்துமே அதிக உடல் எடை பெரு மூச்சைக் கிளப்பும். பிரச்சினைகளை ஏற்படுத்தும். எதையும் எதிர்கொள்ள முடடியாத பிரமிப்பை உண்டு பண்ணும்!

அது தேவையா? அவசியமில்லை தானே அளவான எடையுடன் பயணத்தைத் தொடரலாமே!