பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர்.எஸ்.நவராஐ் செல்லையா


3. அளவான எடை எவ்வளவு


சராசரி ஒரு ஆணுக்கு, அவரது உடல் மொத்த எடையில் 10 முதல் 20 சதவிகிதம் வரை கொழுப்பின் எடை இருக்க வேண்டும். மொத்த எடையில் 25 சதவிகிதம் வரை, கொழுப்பின் எடை இருக்கவேண்டும்.

அதற்கு மேலாக கொழுப்பு சேர்ந்திருக்கும் பொழுது தான், ‘கொழு கொழு’ அழகும். ‘மொழு மொழு’ சிறப்பும் முனை முறிந்து போய், அலங்கோலத்திற்கும், அவலட்சண தோற்றத்திற்கும் ஆட்படுத்தி விடுகிறது.

இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்குமே! எனக்கு எவ்வளவு எடை இருந்தால் சீராக இருக்கும்? ஜோராக இருக்கும்?

நியாயம்தான் பொறி பறக்கும் உங்களின் ஆவலும் ஏற்புடையதுதான்.

உடலின் உயரம், வயது, பால், பணி இவற்றைப் பொருத்தே உங்கள் உடல் எடை அமையும் என்றாலும், உடற்கூறு வல்லுநர்கள், உடலை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கின்றனர்.

1. சிறிய உடலமைப்பு (Small Frame-Endomorph)

2. நடுத்தர உடலமைப்பு (Medium Frame-Meessomotph)

3. பெரிய உடலமைப்பு (Large Frame-Ectomorph)

ஒரு ஆண் 5 அடி 6 அங்குலம் உயரம் இருந்தால் (167 செ.மி) அவரது எடை, சிறிய உடலமைப்புக்கு 132