பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

17


பவுண்டும், நடுத்தர உடலமைப்புக்கு 140 பவுண்டும், பெரிய உடலமைப்புக்கு 151 பவுண்டும் இருக்கலாம்.

இப்படி உடற்கூறு வல்லுநர்கள் மட்டுமா கணக்குப்போட்டு வைத்திருக்கின்றார்கள்? இல்லை. இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகாரர்களும். மிகவும் அக்கறையுடன் அலசிப்பார்த்து. குறித்து வைத்திருக்கின்றார்கள்.

ஏன்? அதிக எடையுள்ள மனிதர்களுக்கு அகாலமரணம் ஏற்பட்டுவிடும் என்று தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் இன்ஸ்யூரன்ஸ் செய்பவர்களைவிட, இவர்களுக்குத்தான் ஆர்வமும். அங்கலாய்ப்பும் அதிகம்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, அவர்கள் போட்டு வைத்திருக்கும் பட்டியலைப் பாருங்கள். பிறகு உங்களையும் பாருங்கள். உடல் எடையும் அளவும் புரியும். முதலில் உங்கள் உயரம் எவ்வளவு என்று அளந்து கொள்ளுங்கள். அதாவது செருப்பு, ஷு எதுவும் அணியாமல் உயரத்தை அளக்க வேண்டும்.

உங்கள் எடை பார்க்க, எடை இயந்திரத்தில் ஏறுகிறபொழுது, மேல்நாட்டுபாணியில், உடையில்லாமல் (Naked) இருக்க வேண்டும் என்கிறார்கள். நம்நாட்டு பணி என்கிற போது, மிகவும் இலேசான அல்லது குறைவான உடை அணிந்திருக்க வேண்டும். அது சரியான கணக்குக்காகத் தான்.

எடை எந்திரத்தில் ஏறிய பிறகு, நேராக நிமிர்ந்து நிற்கவும். யாராவது ஒருவர் எடையை பார்ப்பது நல்லது. நீங்களே குனிந்து பார்க்கக் கூடாது.