பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


5. சராசரி எடைக்கும் குறைவாக உடல் எடை இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை குறைவாகத்தான் இருக்கிறதா என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். இப்படி எடை குறைவாக அமைவது அவரவர் பரம்பரைத் தொடர்பாக ஏற்படுகிற குறையாகக்கூட இருக்கலாம். அல்லது அவரது செயல்பாடுகளில் ஏற்படுகிற தவறுகளால் கூட இருக்கலாம்.

உடல் எடை குறைவாக இருக்கிறது; குறைந்து கொண்டே வருகிறது என்றும் தெரிகிறபோது, அதற்காக ஆதங்கப்படவோ அலட்டிக் கொள்ளவோ அவசியமில்லை. உடனே உங்களது வைத்தியரை அணுகி, எடை குறைகிற காரணத்தைக் கண்டுபிடித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

6. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், சராசரி எடை அளவிற்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

குறைவாக எடை உள்ளவர்கள் எல்லாம், எனக்குத் தெரியும் என்று, தானே அடாவடியான காரியங்களைப் பண்ணிக் கொள்ளக்கூடாது. அதற்கெனப் படித்த பயிற்சி பெற்ற, பக்குவம் அடைந்த, உடல்நல மருத்துவர்களை முதலில் சென்று சந்திக்க வேண்டும்.

எதனால் உடல் எடை குறைந்திருக்கிறது. என்ற அடிப்படையான காரணங்களை கண்டறிய வேண்டும்.

சிலருக்கு எடை குறையக் காரணம் அவர்கள் தங்களுக்குள்ளே கடுமையான விரதப் போக்கைக்