பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

29


கடைப்பிடிப்பது. கோப தாபத்தால், கொந்தளிப்பால், பிறரைப் பயமுறுத்துவதற்காக தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்வதற்காக பட்டினி கிடப்பது என்று பல விஷயங்கள் உண்டு.

நாம் குண்டாகி விடுவோமோ என்ற கற்பனை பயத்தில், உண்ணும் அளவைக் குறைத்துக் கொள்வதும்;

பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்பதற்காக், சாப்பாட்டு அளவைக் குறைத்து உண்பது.

இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இளம் பெண்களிடம் தான் அதிகமாகக் காணப்படுகிறது.

இதற்கு ஆங்கிலத்தில் அனோரெக்சியா நெர்வோசா (Anorexia Nervosa)என்று பெயர். இதை மனச்சிதைவு நோய் என்றும் கூறலாம்.

தன் உடல் குண்டாகி விடுமோ என்ற அச்சத்தாலும், அநாவசியமான கற்பனை எதிர்ப்பாலும், தங்களின் உணவைக் குறைத்துக் கொண்டு விடுவது இந்த நோய் தரும் சிறப்பு விஷயமாகும்.

இவர்களை உண்ணுமாறு கட்டாயப் படுத்தினாலும், சாப்பிட்ட பிறகு சர்வ சாதாரணமாக வாந்தி எடுத்து விடுவார்கள்.

இன்னும் சிலர், தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்தபடி தங்களைப் பயங்கரமான திறமைசாலிகளாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன், உணவை மறந்து சில சமயங்களில் உணவைத் தவிர்த்து வெறுத்து ஒதுக்கி விடுவார்கள்.