பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தனது வயதுக்கும், உயரத்திற்கும் ஆண் அல்லது பெண் என்கிறபோது, இவ்வளவு தான் எடை இருக்க வேண்டும் என்கிற ஒரு கணக்கு இருக்கிறதல்லவா?

அதற்கு மேலாக, 20 சதவிகிதம் எடை, அதிகமாக இருந்தால், (100 பவுண்டு தான் இருக்கலாம் என்கிறபோது, 120 பவுண்டு இருப்பது போல) உடனே இதற்கான மருத்துவரைப் போய் பார்ப்பதுதான் நல்லது.

அக்கம் பக்கம் சொல்கிறார்கள்; கேட்டவர்கள் யோசனை தருகிறார்கள் என்று மானாவாரியாக மனதில் பயந்து கொண்டு, தானே முயன்று, தன்னிஷ்டம் போல, எடையைக் குறைக்க முயற்சித்தால், எடை குறைவது போல குறையலாம்.

அப்படி நேர்கிற நிலைமையில் தேகத்திற்கு களைப்பு (Fatigue) நேரலாம். முழுச்சோர்வும் (Exhaustion) ஏற்படலாம். இது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது. காரணம், வைட்டமின் சத்துக்களும் வரம்பு மீறி இல்லாமல் குறைந்து போவதுதான்.

ஆக, எப்படி உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறதல்லவா!

ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 பவுண்டு எடையை குறைக்கலாம். ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 10 பவுண்டு எடை குறைந்தால், அதுதான் சீரான முறை, சிறப்பான நிலை என்று சொல்லலாம்.

அளவான மாவுச்சத்து உணவு, கோதுமைப் பண்டங்கள், உயர்ந்த அளவு புரோட்டின் உள்ள உணவுகள், புத்தம்புதிய பச்சடி (Salad) உணவுகள் என,