உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

37


மருத்துவர் காட்டுகிற வழிமுறையோடு, உண்ண வேண்டும். (உணவுப் பகுதியில் விரிவாகக் காணலாம்)

(சீரான உடல் எடைக்கு சிறப்பான உடற்பயிற்சிகள் என உண்டு. அவற்றையும் உடற்பயிற்சிப் பகுதியில் காணலாம்)

12. மருந்து மாத்திரைகளால் உடல் எடைகளை குறைக்க முடியுமா?

மனிதர் வாழ்வில், உணவு, உடை, உறையுள் என்று மூன்றும் தான் முக்கியத் தேவைகள் என்றனர்.

கல்வி, ஒழுக்கம், பண்பாடு என்ற மூன்றும் முக்கியம் என்பதைப் பெரியவர்கள் சொல்ல மறந்தனர்.

பணம், பதவி, காமம் இவைதான் இன்றைய வாழ்க்கை லட்சியம் என்பதை செயல் மூலமாக இளைஞர்கள் காட்டி வருகின்றனர்.

அதனால் மனிதர்களுக்கிடையே, அநியாய சாவுகள். பெயர் தெரியாத புதுப்புது நோய்கள்; சமுதாயத்தையே சாகடிக்கும் சகலவிதமான மனப் பாதிப்புகள் எல்லாம் மலிந்து போய் கிடக்கின்றன.

வந்த புது நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முயற்சிக்கும் போதே, வேறுபல புதுநோய்கள் வீறு முகம் காட்டி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வருகின்ற புது நோய்கள் எல்லாம் மனிதர்களை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சகல வேதனைக்குள்ளேயும் கொண்டு சென்று நையப்புடைக்கின்றன.