பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

41


14. உணவில் விட்டமின் சத்துக்களை சேர்த்துக் கொள்வதால், பாதிப்புகள் நேராமல் பயன் கிடைக்குமா?

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நல்ல உடல் நலத்துடன் தானே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நலமான நிலையில் அதிகமாக விட்டமின்கள் வேண்டும், என்பது அவசிய மில்லை. விட்டமின் என்பது (Vita) விட்டா என்ற சொல்லுக்கு உயிர் என்று பொருள். அதுவே உணவில் உயிர்ச்சத்தாக விளங்குகிறது. சமநிலையான சத்துணவு சாப்பிடுகிறபோதே தேவையான உயிர்ச்சத்தும் கிடைத்து விடுவதால், தனியாக உயிர்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்பது தேவையில்லை, அவசியமும் இல்லை.

15. சிலருக்கு உடல் எடை தேவையான 'அளவு' இருந்த போதிலும், அவர்கள் உடல் அமைப்பு திருப்தி அளிக்கவில்லையே?

தினந்தோறும் தவறாமல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறபோது, உடல் எடையும் உரிய அளவுக்கு வரும். உடற்பயிற்சி மூலம் தசைகளுக்கு வேண்டிய விசைச்சக்தி (Muscle Tone) ஏற்படுகிறது. உடல் உறுப்புக்களின் இயக்கத்தாலும், இடுப்புப் பகுதியை நன்கு இயக்குவதாலும், இடுப்புச் சதைகள் கரைந்து போகின்றன. அதனால் இடையின் அளவு சுருங்க, நல்ல தோற்றம் தெரிகிறது. தொடைச் தசைகளில் கொழுப்பு குறையக் குறைய, கரையக் கரைய, நிற்பதிலும் நடப்பதிலும் ஓர் அழகு ஏற்படுகிறது. உடற்பயிற்சியினால் தசைகளின்