பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அமைப்பில் சற்று கூடுதலான விரிவுகள் வந்தாலும், உடல் பார்க்க அழாகாகவே தோற்றம் அளிக்கும்.

16. நோயாளிகளுக்கு உடல் எடையும் குறைகிறது. உடல் அமைப்பும் தோற்றமும் குறைவதற்குரிய காரணங்கள் யாவை?

நீங்கள் கூறுவது உண்மைதான். நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் (அதாவது நெஞ்சுருக்கிநோய், நீரழிவு நோய் புற்றுநோய் மற்றும் வருகிற தொண்டைநோய் வகைகளைக் கூறலாம்). அதனால், எடையை அதிகமாக இழக்கலாம்.

அவற்றால் ஏற்படுகிற காய்ச்சல், செய்யப்படுகிற அறுவை சிகிச்சை அல்லது விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுகிறவர்களின் உடலுக்குள்ளே ஏற்படுகிற செல் பிரிந்து வளர்கிற செல்களின் வளர்ச்சி விகிதம் (Metabolism) தொடராமல் நின்று போகின்றன.

அந்தச் சூழ்நிலையில், புதிய செல்கள் பிரிந்து தோன்றாததும், பழைய திசுக்களே வேகமாக அவசரம் கருதி எரிந்து சக்தியைத் தருவதும், எரிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்கள் தோன்றதாததுமே உடல் எடை இழப்புக்கு முக்கிய காரணமாகிறது.

இன்னும் சில நேரங்களில், அளவுக்கு அதிகமாகவே செல்களும் திசுக்களும் எரிந்து பாதிக்கப்படுவதும், அதிகமாகவே எரிந்து போவதும் முக்கிய காரணமாகும். இதை Hyper Thyroidism என்பார்கள்.