பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

45


இப்படி கூறுகிற எல்லாக் காரணங்களுமே, இதற்கு சரியான விடைதானா என்றால், அது சிறிதளவு இருக்கலாம். ஆனால், அதுவே அனைத்து காரணங்களுக்கும் ஆதாரமாக அமைந்து விடாது.

உடலில் எடை கூடுவது ஒரு குறிப்பிட்ட நாளமில்லாச் சுரப்பியினால்தான் என்று கூறினால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒரு காரணம் ஆகும். அதாவது, இது ஒரு 10,000 குண்டான பேர்களில், ஒரு வருக்கு ஏற்படுகிற வாய்ப்பு என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பொதுவாகச் சொல்வார்கள். உடல் குண்டாவதற்கு ஒரே ஒரு சுரப்பிதான் வேலை செய்யாதது என்றால், அது எச்சில் சுரப்பிகளாகத்தான் இருக்க முடியும் (Salivary glands) என்று சொல்வார்கள். ஆனால், அதுவும் சரியல்ல. வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், குண்டான மனிதர்கள், ஒல்லியான மனிதர்களை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள். ஆதனால் அங்கே எச்சில் சுரப்பிகள் காரணம் என்பது அடிப்படை இல்லாமல் போகிறது.

அடுத்தபடியாக, செல்கள் வினைச் சிதை மாற்றம் ஒரு காரணம் என்பது, பொதுவாக எல்லோரும் பேசக் கூடிய விஷயம் தான். இது போல் செல்கள் பிறந்து, வளர்ந்து உடலில் ஏற்படுத்துகின்ற மாற்றம் என்பது ஒருவர் உண்கின்ற உணவு சீரணிக்கப்பட்டு அது உடலிலே சக்தியாக மாறுகிறபோதுதான் ஏற்படுகிறது.

இப்படி உணவானது சக்தியாக மாறுவதும், உடலிலே உள்ள செல்கள் பிறந்து, வளர்ந்து செயல்படுவதும், எல்லாம் மனிதர்கள் உண்ணும் உணவினால்