பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெளிப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றன. அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள்?, அவை எப்படி சக்தியாக மாறுகிறது?, எப்படி ஜீரணிக்கப்படுகிறது? என்பதெல்லாம் பலவிதமாக அமைப்புகளால் அரங்கேறுகிறது.

சில மனிதர்கள் தேவைக்கு அதிகமாக உண்பதில் ஆர்வம் காட்டுவது உண்டு. ஒரு சிலர், சிறிதளவே உண்டாலும் அது அவர்களுக்கு அதிகமாகிப் போவதும் உண்டு. ஆக, அதிகமாக உண்பவர்கள், ஒல்லியாக இருப்பதும், குறைவாக உண்பவர்கள் குண்டாக இருப்பதும் என்ன காரணம் என்று ஆராயும்போது, அந்த உண்மை இன்னும் விளங்காத புதிராகவே இருக்கிறது.

உடல் எடையானது தொடர்ந்து பரம்பரைப் பண்பால் வருகிறது என்பது ஒரு காரணம். இப்படி இயற்கை பரம்பரையையும், செயற்கையில் உண்ணுகிற உணவு முறையையும் இணைத்துப் பேசிவிடுவதால் எந்தப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இந்த இயற்கை முறையும், செயற்கை உணவு முறையும், உரிய இடம் பெறுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவும், வாழ்க்கையில் செயல்படும் முறையும், அவர்களை இவ்வாறு மாற்றம் உடையவர்களாக விளங்கச் செய்கிறது. இதற்கு அவர்களது பிறப்புதான் முக்கியமாக பங்குவகிக்கிறது, என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக சிலருக்கு பிறப்பிலேயே ஏற்பட்டிருக்கிற பருத்த உடலுக்குக் காரணம் எதுவாக அமைகிறது என்றால் அவர்கள் உடலிலே உணவு செயல்படுத்தும் மாற்றமும் காரணம் என்றும், அவர்கள் உடலிலேயே