பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆகாது. பொறுமையாகத்தான் போக்க முயற்சிக்க வேண்டும். அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும் என்றும் பேசுகின்றனர்.

இதனால், குண்டாகியிருக்கும் வயதானவர்களும், வாலிபர்களும் எங்களால் எடையைக் குறைக்க முடியாது என்று இந்தக் காரணத்தைக் கூறி, தப்பித்துக் கொள்கின்றனர். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நாம் முன்னர் கூறுயிருக்கும் இரண்டு குறிப்புகளும் அதாவது, குழந்தைகளுக்கு அதிகக் கொழுப்பைக் குறைக்க முயல்வது தொந்தரவுகளைத் தரும் என்பதும் பொய்யானது என்றே, பலரும் வாதிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றாலும், முயற்சித்தால் முடியாதது உலகில் உண்டோ?

3. வாலிப வயதில் குண்டாவது ஏன்?

13 வயதிலிருந்து 19 வயது வரையிலும் உள்ள வயதை, Teenage என்பார்கள். இந்த வயதுப் பருவம், வளர்ச்சிமிக்கப் பருவம். இந்த வயதிற்குள்தான் உடலின் உயர வளர்ச்சியும், உடலின் எடை வளர்ச்சியும் எடுப்பாக இருக்கும்.

இந்த விடலைப் பருவத்தில் தான், பால் உணர்வு இயங்கு நீர் சுரப்பு (Sex Harmones) அதிகமாக இருக்கும். இதில் ஏற்படுகிற மாற்றங்களே, பெண்களுக்கு உடலில் அதிக எடையை உண்டாக்கி குண்டாக்கி விடும்.

அதேசமயத்தில், உடலுக்கும் உணவின் தேவை அதிகமாகும். அப்பொழுது, அதிக அளவு உண்ணுகிற