உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

51


வரை அதாவது (9.5 கிலோ முதல் 12.5 கிலோ வரை) உயர்ந்து கூடி விடுகிறது என்பது ஆய்வாளர்களின் ஆய்வில் கிடைத்த அனுபவபூர்வமான கருத்தாகும்.

இவ்வாறு அதிக அளவு எடை கூடுவது என்பது அந்தத் தாயின் உடலிலே உள்ள கொழுப்புச் சத்தானது, மேலும் அதிகமாக சேர்ந்து கொண்டு, அவர்களை குண்டாக்கி விடுகிறது. இதற்கும் சாதாரணமாக, உடல் எடை கூடுவதற்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

அந்தப் பெண்ணின் உணவு முறையும், உணவு உட்கொள்ளும் முறையும், உணவு ஜீரணிக்கப்படுகின்ற விதத்தால் உடலிலுள்ள செல்களின் பரிணாம வளர்ச்சி முறை ஓரளவு மாறிவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையால் தான் உடலுக்கு அப்படி ஓர் அமைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ஒருசில பெண்கள் கர்ப்ப காலத்தில் கூடுகின்ற உடல் எடையானது. குழந்தை பெற்றெடுத்த பிறகும் கூட, குறையாமல் அப்படியே இருந்து விடுகிறது.

குறிப்பாக முதல் குழந்தை பெற்ற சில பெண்களுக்கும் இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம் உடனே ஏற்பட்டு விடுகிறது. அந்த நேரத்தில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஒரளவு அந்தப் பெண்ணின் உடல் எடையை குறைக்கவே முடியாது.

அவர்கள் சாதாரணமாக உண்பதை விட மிக அதிகமாக உட்கொள்வதும், அதனால் இரத்த நாளங்கள் விரிந்து இரத்த ஓட்டம் பெருகுவதும் போன்ற செயல்கள் எல்லாமே, அந்தப் பெண்ணுக்கு அப்படி ஒரு உடல் அமைப்பை உருவாக்கி விடுகிறது.