52
டாக்டர். எஸ. நவராஜ் செல்லையா
அவர்கள் என்ன அப்படி அதிகமாக உண்கிறார்கள்? பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல உணவு உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தை திடமாகவும், தேக ஆரோக்கியத்துடனும் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுவதை, அவர்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டு உண்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமலும், சத்துள்ள உணவு சாப்பிடாமலும், கர்ப்பம் தரித்திருக்கிற பெண்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள், எடை குறைவாகவும், போதிய மூளை வளர்ச்சி இல்லாமலும், மூளை ஆற்றல் குறைந்தவர்களாகவும் பிறக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் வயிற்றிலே வளருகின்ற குழந்தையானது ஒரு அட்டையைப் போல் தாயின் உடலிலிருந்து எல்லா சக்திகளையும் உறிஞ்சிக் கொண்டு வாழ்கிறது. வளர்கிறது எனவும் கூறுகின்றார்கள். அதனால் எல்லா மருத்துவர்களும் சமவிகித உணவுதான் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற உணவு என்று சாப்பிட வைக்கின்றார்கள். ஆகவே எடை கூடுகிறது என்பது இயற்கையான தானே!
உண்மைதான் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். புகைப்பதை விட்டு விட்டால், உடல் எடை கூடி விடுகிறது. புகை பிடிக்கின்ற ஒருவர் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் உடல் எடை கூடாமல் ஒரே சீராக இருப்பதும், அவர் புகை பிடிப்பதை