பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

53


விட்டு விடுகிறபோது எடை கூடிவிடுகிறது என்பதும் உண்மையென்று ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டு கூறியுள்ளார்கள்.

புகைக்கின்ற பழக்கம், உடலிலுள்ள செல்களைப் பிரித்து வளர்க்கும் பரிணாம வளர்ச்சியை பாதிப்பதில்லை அல்லது பாதிக்கின்றது என்பதற்குத் தேவையான சான்றுகள் எதுவும் இல்லை.

ஆனால் புகைப்பதை நிறுத்திய பிறகு, அவர்களின் எடை எப்படி கூடுகிறது? அவர்கள் புகைப்பதை நிறுத்தி விடுகிறபோது அதிகமான உணவு உட்கொள்கிறார்கள் என்ற ஒரே ஒரு காரணம். புகை பிடிப்பதை விடுவதனாலேயே சாத்தியமாகிறது என பெருமிதமாகக் கூறுகிறார்கள் அனுபவப்பட்டவர்கள்.

காரணம் என்னவென்றால், புகைக்கும் போது சுருட்டு, பீடி அல்லது சிகரெட் என்பதாக அனைத்தும் வாயில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆக, வாயால் ஏதாவது சுவைத்துக் கொண்டோ அல்லது ஏதாவது ஒன்றை வைத்து புகைத்துக் கொண்டிருக்கும் பழக்கமானது நிறுத்தப்படுகிறபோது, ஏதாவது ஒன்றுக்குப் பதிலாக உணவானது அங்கே இடம் பிடித்துக் கொள்கிறது.

ஒருசிலர்உணவுக்குப் பதிலாக 'அசை போடும் பசை' மிட்டாய் என்று அழைக்கப்படும் "Sweing Gum" ஒன்றை போட்டுக் கொண்டு அசைபோட்டு மென்று கொண்டிருப்பார்கள். உடல் குண்டாய் இருப்பதை விட புகைப்பது என்பது உடலுக்கு மோசமான எதிரி என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள்.