பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


7. நடுத்தர வயதும், உடல் எடையும்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், நடுத்தர வயது உள்ளவர்களாக இருக்கும்போது உடல் எடை கூடிப் போகிறது என்பது உண்மையாக இருந்தாலும், அதற்கான சரியான காரணங்கள் இன்னமும் யாராலும் அறியப்படவில்லை. அது உடல் சார்ந்த காரணமா? அல்லது உள்ளம் சார்ந்த காரணமா? அல்லது இளமையானது சோர்ந்து போகும் காரணமா என்பது பற்றி உடற்கூறு வல்லுனர்களால் இன்னமும் உணரப்பட முடியவில்லை.

காரணம் எதுவாக இந்தாலும், உடலுக்குத் தேவையான அளவுக்கு அதிகமாக சாப்பிடும் உணவானது அந்த நடுத்தர வயதிலேயே ஒரு இடத்தில் சேர்ந்து வந்து குவிந்து விடுகிறது. காரணம், அவருடைய உடல் உழைப்பானது இயல்பாகவே குறைந்து போய்விடுகிறது. அதே சமயத்தில் அவர்கள் உட்கொள்கிற உணவும், மதுபானம் குடிக்கும் அளவும் கூடிப் போய் விடுவதும் ஒரு காரணம். அதேசமயத்தில் அவருடைய வாழ்க்கையின் பழக்க வழக்க முறையும் மாறிப் போகிறது.

நடப்பதற்குச் சோம்பேறித்தனம். கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்க கெளரவம் காட்டுகிற அவரது மனோலயம். உடல் உழைப்பைப் பற்றி நமக்கு ஏன் இந்த உடல் உழைப்பு? நம் வசதிக்கேற்ப வேலையாளை வைத்து வேலை வாங்கிக் கொள்வோம் என்கிற ஒரு பணக்காரத்தனம். சோம்பேறிக் குணம் எல்லாம் அவர்கள் உடலிலே போய் ஊறிக் கொள்வதுதான் முக்கிய காரணம்.