56
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
ஆளை வைத்துக் கொண்டு உடலில் மசாஜ் செய்வது போல் பிடித்து விடுவதும், அதனை முறையில்லாத வகையில் முயற்சி செய்வது போன்ற எல்லா செயல்களுமே தவறானவை.
அவைகள் எல்லாம் எந்தவிதமான பயனையும் கொடுக்க இயலாத காரியங்களாகி விடுகின்றன.
உடலிலே நீர் அளவு அதிகமாகி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, தண்ணீரையே குடிக்காமல் இருப்பது! இப்படி குறைந்த நீர் அளவால் வியர்வையை ஏற்படுத்தி எடையை குறைத்து விட்டாலே போதும் என்று சிலர் முயற்சி செய்வதும் உண்டு. இதை சோனாபாத் என்பார்கள். வியர்வையை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சி.
அதாவது துருக்கியர்கள் வியர்வை வருவதற்கு என்று ஒரு விநோதமான குளியல் முறையை ஏற்படுத்தினார்கள். வியர்வையை உண்டாக்குகின்ற முறையில் நீரை வெளியேற்றுகிற போது அது பயன் அளிப்பதாக இருந்தாலும் அதனால் ஏற்படுகின்ற நீர் இழப்பு என்பது தற்காலிகமானதுதான்.
ஆகவே, ஏற்படுவதாகத் தோன்றிய உடல் எடை குறைவானது, அவர்கள் உண்ணும்போதும், கிடக்கும் போதும் முன் இருந்த உடலின் எடையை மீண்டும்